

ஹோர்சென்ஸ்,
ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் உள்ள ஹோர்சென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின் றன. தாமஸ் கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத் திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் ஆஸ்தி ரேலியாவை துவம்சம் செய்தது.
நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் பலப்ப ரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி தனது பிரிவில் முதலி டத்தை பிடிக்கும்.