தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தள்ளிவைப்பு

தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தள்ளிவைப்பு
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக டென்மார்க்கில் வருகிற மே 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்க இருந்த தாமஸ் கோப்பைக்கான ஆண்கள் அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உபேர் கோப்பைக்கான பெண்கள் அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டிகள் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து உலக பேட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் தாமஸ் லுன்ட் கூறுகையில், வீரர்கள் உள்பட போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரின் சுகாதாரம், பாதுகாப்பு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கட்டுப்பாடு காரணமாகவே இந்த தள்ளிவைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com