

டோக்கியோ,
32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டி நடந்தது.
இதில் இந்திய வீரர் அடானு தாஸ் சீன தைபேவின் டெங் யூ-செங் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த போட்டியில், தென்கொரியாவின் ஓ ஜின்-ஹையெக் என்பவரை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவரான ஹையெக்கை வீழ்த்தி 8 பேர் கொண்ட அடுத்த சுற்று போட்டிக்கு அடானு தாஸ் முன்னேறியுள்ளார்.