

டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் தடகள போட்டியின் 100 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் கலந்து கொண்டார்.
ஒடிசாவை சேர்ந்த 25 வயது வீராங்கனையான சந்த், அவர் போட்டியில் 7வது இடம் பெற்று தோல்வியடைந்து வெளியேறி உள்ளார். அவர் பந்தய தொலைவை கடக்க 11.46 நேரம் எடுத்து கொண்டார். எனினும் முதல் இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி ஆன்-பிரேசர் பிரைஸ் (10.84) எடுத்து போட்டியில் முதல் இடம் பிடித்து உள்ளார்.