

டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது.
இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வியடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
தீபிகா குமாரி வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் பூடான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த போட்டியில் வென்றால் காலிறுதிக்குத் தகுதி பெறுவார்!