

டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9வது நாளான இன்று நடந்த வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அடானு தாஸ் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானிய வீரரான டகாஹரு புருகவாவிடம் தோல்வி அடைந்து உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் அடானு தாஸ், சீன தைபேவின் டெங் யூ-செங் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த போட்டியில், தென்கொரியாவின் ஓ ஜின்-ஹையெக் என்பவரை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
இதனால், எலிமினேசன் சுற்றுக்கு தகுதி பெற்ற அவர், இன்று நடந்த போட்டியில் தோற்று வெளியேறி உள்ளார். இதனால் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை அவர் இழந்துள்ளார்.