டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
Published on

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான தகுதி சுற்று போட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் போட்டி ஒன்றில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை வெற்றி பெற்று ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.

எனினும், மற்றொரு இந்திய ஜோடியான யஷாஸ்வினி தேஸ்வால் மற்றும் அபிசேக் வர்மா இணை தோல்வியடைந்து வெளியேறி உள்ளது. இந்த போட்டிக்கான இறுதி சுற்று காலை 8.07 மணிக்கு நடைபெற உள்ளது.

இதேபோன்று, இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான ஆக்கி ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்று இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com