

டோக்கியோ,
பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.