டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி: இந்திய வில்வித்தை வீரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர் ராகேஷ் குமார் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி: இந்திய வில்வித்தை வீரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

டோக்கியோ பாராஒலிம்பிக் ஆடவர் வில்வித்தை தனிநபர் போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் இன்று நடந்த தகுதி நீக்க சுற்றில் ஹாங்காங்கின் காய் கா சூவென் என்பவரை 144-131 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

போட்டி நிறைவடைய ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது, ராகேஷ் அதிரடியாக இலக்கை நோக்கி அம்புகளை அடித்து வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com