இந்திய இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்

ஓட்டப் பந்தய பிரிவில் இந்தியாவின் வேகமான பெண் ஆக இருக்கும் தரண்ஜித் கவுர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.
இந்திய இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்
Published on

புதுடெல்லி,

ஜூனியர் பிரிவில் இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனையாக வலம் வந்த டெல்லியைச் சேர்ந்த 20 வயதான தரண்ஜீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முறையே 11.54 வினாடி மற்றும் 23.57 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பிலும் ஆதிக்கம் செலுத்தினார். இந்த நிலையில் போட்டியின் போது அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணமானால் 4 ஆண்டுகள் வரை தடையை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்திய தடகளத்தின் வளரும் நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்ட தரண்ஜீத் கவுர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பது தடகள சங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com