

ஹோர்சென்ஸ்,
பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் உள்ள ஹோர்சென்ஸ் நக ரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 16 முறை சாம்பியனான சீனாவை சந்தித்தது. சீனாவின் சவாலுக்கு ஈடுகொடுக்க முடி யாமல் திணறிய இந்திய அணி 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
முதல் ஆட்டத்தில் டென்மார்க்கிடம் (2-3) தோற்று இருந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் உக்ரைனை (4-1) தோற்கடித்து இருந்தது. தனது பிரிவில் 3-வது இடம் பெற்ற இந்திய அணி காறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.