சிறந்த உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர்களுக்கு விருது: உதயநிதி வழங்கினார்

முதல்-அமைச்சரின் மாநில விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.


சிறந்த உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர்களுக்கு விருது: உதயநிதி வழங்கினார்
Published on

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த உடற்கல்வி ஆசிரியர், சிறந்த பயிற்சியாளர், சிறந்த நடுவர். சிறந்த போட்டி ஒருங்கிணைப்பாளர், சிறந்த விளையாட்டு நன்கொடையா ளர், சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு முதல்-அமைச்சரின் மாநில விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2024-25-ம் ஆண்டு விளையாட்டு விருதுக்கான சிறந்த உடற்கல்வி ஆசிரியார், பயிற்சியளர்களுக்கான விருது து வழங்கும் விழா சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடந்தது. விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

அத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்ற தேர்வாகியுள்ள 28 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதுடன், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் குவித்திடும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் என்று கேட் டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com