தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி:  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக தடகள வீரர்கள் கோகுல பாண்டியன், நவீன்குமார், வீராங்கனைகள் சுஜி, யாமினி ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக மொத்தம் ரூ.1.35 லட்சத்திற்கான காசோலையையும், வில்வித்தை வீரர்கள் சதீஷ்குமார், பிரித்தீஸ்வரன் ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதே போல் அடுத்த மாதம் சவுதிஅரேபியாவில் நடக்கும் ஆசிய பாரா ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்வதற்காக பாரா சைக்கிளிங் வீரர் பிரதீப்புக்கு செலவீனத் தொகையாக ரூ.2.5 லட்சமும், ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக வீரர் சஞ்சய்க்கு ரூ.2 லட்சமும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com