அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: தொடக்க சுற்றில் சிந்து வெற்றி

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: தொடக்க சுற்றில் சிந்து வெற்றி
Published on

கவுன்சில் பிளப்ஸ்சில்,

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-8, 21-16 என்ற நேர்செட்டில் பின்லாந்தின் காலே கோல்ஜோனினை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-11, 21-16 என்ற நேர்செட்டில் அயர்லாந்தின் ஹாட் நுயேனை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 14-21, 19-21 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள லி ஷி பெங்கிடம் (சீனா) வீழ்ந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-12 என்ற நேர்செட்டில் திஷா குப்தாவை (அமெரிக்கா) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய வீராங்கனை ருத்விகா ஷிவானி 14-21, 11-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் ஹிசாங் தியிடம் தோல்வி கண்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com