மின்னல் மனிதர் உசைன் போல்ட், பெண் குழந்தைக்குத் தந்தையானார்

மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
மின்னல் மனிதர் உசைன் போல்ட், பெண் குழந்தைக்குத் தந்தையானார்
Published on

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com