செப்டம்பர் மாதம் இந்தியா வரும் உசைன் போல்ட்


செப்டம்பர் மாதம் இந்தியா வரும் உசைன் போல்ட்
x

Image Courtesy: X (Twitter) / File Image

இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்என உசைன் போல்ட் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், உசைன் போல்ட் செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார்.

செப்டம்பர் 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது, இந்தியாவுக்கு செல்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறேன்.

இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். உசைன் போல்ட் இந்தியா வர இருப்பது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2014-ம் ஆண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story