பார்முலா1 கார்பந்தயத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பென்

நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் ஒரு மணி 22 நிமிடம் 30.450 வினாடிகளில் முதலாவதாக வந்து 25 புள்ளிகளை கைப்பற்றினார்.
பார்முலா1 கார்பந்தயத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பென்
Published on

ஸ்பா,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12-வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308.052 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) ஒரு மணி 22 நிமிடம் 30.450 வினாடிகளில் முதலாவதாக வந்து 25 புள்ளிகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அவர் இந்த சீசனில் ருசித்த 10-வது வெற்றியாகும். அவரை விட 22.305 வினாடி பின்தங்கிய மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகளை பெற்றார். 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெசிடஸ் அணி) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதுவரை நடந்துள்ள 12 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 314 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செர்ஜியோ பெரேஸ் 189 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 13-வது சுற்று போட்டி நெதர்லாந்தில் ஆகஸ்டு 27-ந்தேதி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com