வினேஷ் போகத் போட்டிகளில் பங்கேற்க தடை

இந்திய மல்யுத்த சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

வினேஷ் போகத் போட்டிகளில் பங்கேற்க தடை
Published on

புதுடெல்லி,

ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை மீறியதற் காக வினேஷ் போகத் ஜூன் 26-ந் தேதி வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஓய்வில் இருந்து விடுபடுவதாக சமீபத்தில் அறிவித்த வினேஷ் போகத் உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் தேசிய ஓபன் ரேங்கிங் மல்யுத்த போட்டியின் மூலம் களம் திரும்ப முடிவு செய்திருந்தார். ஆனால் தேசிய ரேங்கிங் போட்டியில் தன்னை பங்கேற்க விடாமல் தடுக்க மல்யுத்த சம்மேளம் சதி செய்வதாக சில தினங்களுக்கு முன்பு வினேஷ் போகத் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் ஒழுக்கமின்மை மற்றும் ஊக்க மருந்து தடுப்பு விதி களை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து 14 நாட்க ளுக்குள் விரிவான விளக்கம் அளிக்கும்படி வினேஷ் போகத்துக்கு, இந் திய மல்யுத்த சம்மேளனம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது. அத்துடன் அவர் வருகிற ஜூன் 26-ந் தேதி வரை எந்தவொரு உள்ளூர் போட்டியி லும் பங்கேற்க தகுதியற்றவர் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இத னால் வினேஷ் போகத் மல்யுத்த களத்துக்கு திரும்புவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com