காமன்வெல்த்: மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் விவரம் வெளியீடு

காமன்வெல்த் விளையாட்டின் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 பிரிவுகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் பிரிவில் தேர்வாகியுள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

லக்னோவில் இதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பூஜா கெலாட் (50 கிலோ எடைப் பிரிவு), வினேஷ் போகாத் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), சாக்ஷி மாலிக் (62 கிலோ), திவ்யா கக்ரான் (68 கிலோ) மற்றும் பூஜா தண்டா (76 கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெவ்வேறு எடை பிரிவுகளின் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பூஜா தண்டா ஆகியோர் கடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com