

மும்பை,
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீது ஒழுங்கீனம் மற்றும் ஊக்க மருந்து விதிமுறை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டை சுமத்திய இந்திய மல்யுத்த சம்மேளனம் அதற்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அளிக்கப்பட்ட உத்தரவின்படி ஆசிய போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.ஆசிய போட்டிக்கான தகுதி தேர்வில் அவர் அரையிறுதியில் தோற்று வெளியேறினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வினேஷ் போகத் மீதான நோட்டீசு விவகாரத்தில் 2 வாரத்துக்குள் முடிவு எடுக்குமாறு மல்யுத்த சம்மேளனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் ஆசிய போட்டி தேர்வு முடிந்து விட்டதால் இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. மேலும் இந்திய அணி தேர்வு விதிமுறை மாற்றம் குறித்து தனியாக மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி கூறினார்.