தேசிய கொடியை கீழே விழாமல் லாவகமாக பிடித்த நீரஜ் சோப்ரா..!

பார்வையாளர் ஒருவர் வீசிய நம் நாட்டின் தேசியக்கொடியை தடகள வீரர் நீரஜ் சோப்ரா கீழே விழாமல் தடுத்து பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தேசிய கொடியை கீழே விழாமல் லாவகமாக பிடித்த நீரஜ் சோப்ரா..!
Published on

ஹாங்சோவ்,

சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில், 4-வது வாய்ப்பில் அதிகபட்சமாக 88.88 மீ., துரம் எறிந்த நீரஜ், தங்கத்தை தட்டிச்சென்றார். இது ஆசிய விளையாட்டில் இவர் தொடர்ந்து வென்ற 2வது தங்கம் இதுவாகும்.

இந்நிலையில் தங்கம் வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சுற்றி வந்து புகைப்படம் எடுக்க சென்று கொண்டிருந்த நீரஜ் சோப்ராவை நோக்கி பார்வையாளர் ஒருவர் நமது மூவர்ண தேசியகொடியை வீசினார். உடனே அதை கீழே விழாமல் தடுத்து லாவகமாக பிடித்தார் நீரஜ் சோப்ரா. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com