துபாயில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்: பிவி சிந்து

துபாய் , அபுதாபி உள்ளிட்ட இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியது.

துபாயில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்: பிவி சிந்து
Published on

தெஹ்ரான்,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்தன. ஈரான் உச்ச தலைவர் காமேனி தங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் , அபுதாபி உள்ளிட்ட இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் துபாயில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை தனது அணியினருடன் உள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

இந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது, மேலும் ஒவ்வொரு மணி நேரமும் நிலைமை மேலும் பயமுறுத்துகிறது.சில மணி நேரங்களுக்கு முன்பு, விமான நிலையத்தில் நாங்கள் தஞ்சம் புகுந்த இடத்திற்கு அருகில் தாக்குதல் நடந்தது. பு எனது பயிற்சியாளர் அந்த இடத்தை விட்டு விரைவாக ஓட வேண்டியிருந்தது. எங்கள் அனைவருக்கும் இது மிகவும் பதட்டமான மற்றும் பயமுறுத்தும் தருணம்.

துபாய் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் துபாய் அதிகாரிகளின் அயராத முயற்சிகளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம், மேலும் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம். துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் நம்பமுடியாத ஆதரவு மற்றும் எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியதற்கு சிறப்பு நன்றி.

​​நாங்கள் சிறிது நம்பிக்கையுடன் இருக்கவும் முயற்சிக்கிறோம்.என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com