ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #AsianGames2018
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
Published on

சென்னை,

இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஒட்டுமொத்தமாக 69 பதக்கங்களை பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்திய அணி சிறப்பான பங்காற்றியுள்ளது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பாய்மரப்படகு பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கர், கணபதி, வீராங்கனை வர்ஷா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.

நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
மக்களின் மிகப்பெரிய ஆதரவு எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இன்னும் அதிகமான அளவில் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள வேண்டும். பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் அதற்காக நேரத்தை ஒதுக்கி வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com