சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவர் யார்?


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவர் யார்?
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 20 March 2025 5:00 AM IST (Updated: 20 March 2025 5:00 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) சிறப்பு கூட்டம் கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்து வருகிறது.

ஏதென்ஸ்,

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) சிறப்பு கூட்டம் கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்து வருகிறது. இதில் முக்கியநிகழ்வாக ஐ.ஓ.சி.யின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. 12 ஆண்டுகள் தலைவராக இருந்த தாமஸ் பாச் பதவி விலகுவதையடுத்து சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க அந்த அரியணையில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். அவற்றில் முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ, ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் துணைத்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (ஸ்பெயின்) ஆகியோரில் ஒருவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

மேலும் சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட், ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப், சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ், ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகியோரும் போட்டியாளர்களாக உள்ளனர். ஐ.ஓ.சி.யின் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்து புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

1 More update

Next Story