ஒரே கிட்னியுடன் உலக தர வரிசையில் உச்சியை எட்டிய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்

நான் மிக அதிர்ஷ்டசாலி ஒரே ஒரு கிட்னியுடன் என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது என தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் கூறி உள்ளார்.
Image courtesy : Twitter
Image courtesy : Twitter
Published on

கொச்சி:

பிரபல தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ். 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் பேட்டியில் கலந்து கெண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்றவர். பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள அஞ்சு பாபி ஜார்ஜ் கேரளாவில் வசித்து வருகிறார்.

பாபி ஜார்ஜ், தான் வெளியிட்ட டுவிட் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தன்னுடைய வெற்றியின் போதும், விளையாட்டில் பல உச்சங்களை அடைந்தபோதும் தனக்கு ஒரு சிறுநீரகம் தான் இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட ஒரு டுவீட்டில், பலரால் இதை நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், நான் மிக அதிர்ஷ்டசாலி. ஒரே ஒரு கிட்னி, வலி நிவாரணிக்கு கூட ஒவ்வாமை, மந்தமான கால்கள்…..இப்படி பல தடைகள் என் முன் இருந்தன. ஆனாலும் என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மாயமென்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா என்று அஞ்சு டுவீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜு (Kiren Rijiju), அஞ்சு தனது கடின உழைப்பு, திடம் மற்றும் உறுதியின் மூலம் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com