விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் சாதனை

ஜோகோவிச் (செர்பியா), ஆர்தர் ரின்டர்க்னெச்சை (பிரான்ஸ்) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் சாதனை
Published on

லண்டன்,

“கிராண்டஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்ட னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆர்தர் ரின்டர்க்னெச்சை (பிரான்ஸ்) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.

விம்பிள்டனில் அவர் பெற்ற 105-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் விம்பிள்ட னில் அதிக வெற்றிகள் குவித்த வீரரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com