ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள்: தீபிகாவின் பெற்றோர் பேட்டி

தீபிகா மற்றும் அட்டானு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என தீபிகாவின் பெற்றோர் பேட்டியில் கூறியுள்ளனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள்: தீபிகாவின் பெற்றோர் பேட்டி
Published on

ராஞ்சி,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக கேப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 பேட்டி நடந்தது. இதில், நேற்று நடந்த மகளிர் குழு, கலப்பு மற்றும் தனிநபர் ரிகர்வ் போட்டி ஆகிய 3 பிரிவுகளில் இந்தியா வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் அட்டானு தாஸ் ஜோடி கலப்பு இரட்டையர் ரிகர்வ் பிரிவில் இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் 5-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இந்திய ஜோடி தங்க பதக்கம் வென்றது.

பெண்களுக்கான அணியில் ரிகர்வ் பிரிவில் மெக்சிகோ அணியை 5-1 என தோற்கடித்து, தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

இதேபோன்று, மகளிர் தனிநபர் ரிகர்வ் போட்டியில் கலந்து கொண்ட தீபிகா குமாரி அதிலும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

இதுபற்றி தீபிகாவின் தந்தை சிவநாராயண் மகதோ கூறும்போது, நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவரது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டி. தீபிகா தனது கணவர் (அட்டானு) உடன் சேர்ந்து தங்க பதக்கம் வென்று வருவார் என பெருமிதமுடன் கூறியுள்ளார்.

இதேபோன்று தீபிகாவின் தாயார் கீதா தேவி கூறும்போது, எங்களுடைய குடும்பத்தில் தற்போது 2 வீரர்கள் உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர்கள் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள். பயிற்சியாளர்கள் மற்றும் அர்ஜூன் முண்டா ஆகியோர், தீபிகா சிறந்த வீராங்கனையாக வருவதற்கு தொடக்கம் முதலே உதவி செய்தனர் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com