

சென்னை,
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டி நடத்தப்படுகிறது. 'ஏ', 'பி', 'சி' என 3 டிவிசனாக நடைபெறும் இந்த போட்டி நாளை மறுநாள் (11-ந் தேதி) தொடங்கி 25-ந் தேதி வரை நடக் கிறது. 'ஏ' டிவிசனில் எஸ்.டி.ஏ.டி., ராணிமேரி, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல் லூரி உள்பட 7 அணிகளும், 'பி' டிவிசனில் புழல் எப்.சி., ரைட் டிராக் உள் பட 7 அணிகளும் பங்கேற்கின்றன. 'ஏ', 'பி' டிவிசன் லீக் ஆட்டங்கள் கன் னிகாபுரத்தில் உள்ள மாநகராட்சி திடலில் நடக்கிறது. 'சி' டிவிசனில் குளோ பல் ஸ்போர்ட்ஸ், எஸ்.பி.ஓ.ஏ. ஜூனியர் கல்லூரி உள்ளிட்ட 7 பள்ளி அணி கள் கலந்து கொள்கின்றன. இந்த ஆட்டங்கள் பேசின் பிரிட்ஜில் உள்ள டான்போஸ்கோ இளைஞர் மைய மைதானத்தில் நடைபெறுகிறது. ஒவ் வொரு டிவிசனில் உள்ள அணிகளும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணி களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட் டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடத்தப்படும் இந்த போட்டி இளம் வீராங்கனைகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.