மகளிர் உலகக் கோப்பை செஸ் அரையிறுதி: 'டிரா' செய்த இந்திய வீராங்கனைகள்

கோப்புப்படம்
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது
பதுமி,
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக், சீனாவின் லீ டிங்ஜி, டான் ஜோங் யி ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர். ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்களை கொண்டது.
இதன்படி அரையிறுதியின் முதலாவது ஆட்டத்தில் கோனெரு ஹம்பி, லீ டிங்ஜியை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய கோனெரு ஹம்பி, 38-வது நகர்த்தலில் டிராவில் முடித்தார். இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி வழங்கப்பட்டது. இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹம்பி, மீண்டும் லீ டிங்ஜியை சந்திக்கிறார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 30-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியனான டான் ஜோங் யிடன் டிரா கண்டார். இருவரும் இன்று மறுபடியும் மோதுகிறார்கள். இவ்விரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர். மாறாக ஆட்டம் மீண்டும் டிராவில் முடிந்தால், டைபிரேக்கரில் விளையாட வேண்டி இருக்கும்.






