

ஐதராபாத்,
16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கும் தகுதி சுற்று அரையிறுதியில் இந்தியா- இத்தாலி அணிகள் சந்திக்கின்றன.
சலிமா டேடே தலைமையிலான இந்திய அணி லீக்கில் 2 வெற்றி (உரு குவே, வேல்சுக்கு எதிராக), ஒரு டிராவுடன் (ஸ்காட்லாந்துடன்) 7 புள்ளி கள் பெற்றது. இதேபோல் 7 புள்ளிகள் எடுத்த ஸ்காட்லாந்தை கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பின்னுக்கு தள்ளிய இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்ததுடன், தரவரிசை முன்னிலை அடிப்படை யில் உலகக் கோப்பை வாய்ப்பையும் உறுதி செய்தது.
இத்தாலி அணி ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக), ஒரு வெற்றி (ஆஸ்திரியா). ஒரு டிராவுடன் (தென்கொரியாவுடன்) 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்றது.