உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

பெண்களுக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் இஷா சிங் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நிங்போ,
நிங்போவில் நடந்த ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் இஷா சிங் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டியில் சீனாவின் யாவோவை இந்தியாவின் இஷா எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இஷா 242.6 புள்ளிகள் பெற்று 0.1 என்ற கணக்கில் யாவோவை வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓயெஜின் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இஷா இந்த பதங்கத்தை வென்றதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.
Related Tags :
Next Story






