உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா


உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா
x

Image Courtesy: PTI

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

டோக்கியோ,

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அவர் தனது முதல் வாய்ப்பில் 84.85 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.

1 More update

Next Story