உலக தடகள சாம்பியன்ஷிப்: 800 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இம்மானுவேல் வான்யோனி சாதனை


உலக தடகள சாம்பியன்ஷிப்: 800 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இம்மானுவேல் வான்யோனி சாதனை
x

image courtesy:twitter/@WorldAthletics

இந்த போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

டோக்கியோ,

20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. போட்டியின் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் இம்மானுவேல் வான்யோனி (1 நிமிடம் 41.86 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அல்ஜீரியாவின் ஜாமெல் செட்ஜாடி வெள்ளிப்பதக்கத்தையும், கனடா வீரர் மார்கோ அரோப் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

இந்த போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்க பட்டியலில் அமெரிக்கா 12 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடத்திலும், கென்யா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இதில் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story