உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2021: கால் இறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து..!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2021: கால் இறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து..!
Published on

வெல்வா,

26-வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தாய்லாந்தைச் சேர்ந்த வீராங்கனை சோச்சுவோங்-உடன் மோதினார்.

48 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 21-14, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து, சோச்சுவோங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கால்இறுதிக்கு பிவி சிந்து முன்னேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com