உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - காலிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை வர்தானியுடன் மல்லுக்கட்டினார்.
பாரீஸ்,
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி போட்டியில் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார்.
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை வர்தானியுடன் மல்லுக்கட்டினார்.
இந்தப் போட்டியில், வர்தானி 21-14, 13-21, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிவி சிந்து இந்தப் போட்டியில் தோல்வியடைவதற்கு முன், ஒரு போட்டியை கூட இழக்காமல் சிறப்பாக ஆடி வந்தார். கடந்த சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான வாங் ஜி யியை பிவி சிந்து வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






