உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்த சாத்விக்-சிராக் ஜோடி

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடந்து வருகிறது
பாரீஸ்,
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் இரட்டையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் கூட்டணி 21-12, 21-19 என்ற நேர்செட்டில் ஆரோன் சியா-சோக் வூய் இணையை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தது. உலக சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப்பதக்கம் உண்டு.
Related Tags :
Next Story






