உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது
x

இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென்னுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.

பாரீஸ்,

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 25-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

இதன்படி இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென்னுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் முதல் சுற்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர் ஷி யு கியை (சீனா) சந்திக்க வேண்டி உள்ளது. முன்னாள் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு முதல் சுற்று எளிதாக கிடைத்துள்ளது. அவர் 66-ம் நிலை வீராங்கனை கலோயனா நல்பன்டோவாவை (பல்கேரியா) சந்திக்கிறார்.

1 More update

Next Story