

மாட்ரிட்,
26-வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஜப்பானிய வீராங்கனை அகானே யமகச்சி மற்றும் சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங் ஆகியோர் விளையாடினர். உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான யிங்கை 39 நிமிடங்களில் அகானே வீழ்த்தினார்.
உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள அகானே முதல் செட்டை 14-21 என்ற புள்ளி கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டையும் 11-21 என்ற புள்ளி கணக்கில் மிக எளிதில் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனானார்.