

புதுடெல்லி,
30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரர் லக்ஷயா சென், அமெரிக்காவின் காரெட் டேனை எதிர்கொண்டார். கடைசி புள்ளி வரை நீயா-நானா? என திரில்லிங்காக நீடித்த இந்த மோதலில் லக்ஷயா சென் 21-19, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிக்குள்ளானார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய 'இளம் புயல்' ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற நேர் செட் டில் இலங்கையின் அபேவிக்ரமாவை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையரில் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கால்பதித்த இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-16, 21-17 என்ற நேர் செட்டில் கனடாவின் வென் யு ஜாங்கை 35 நிமிடங்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 3-வது சுற்றை எட்டினார்.