

புதுடெல்லி,
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். டெல்லியில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்ட் ஆப் 16’ போட்டியில், சீனாவின் உலகின் 3-ம் நிலை வீராங்கனை வாங் ஷி யியிடம் சிந்து 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தனது 6-வது பதக்கத்தை வெல்லும் சிந்துவின் கனவு முடிவுக்கு வந்தது.