

மாட்ரிட்,
26-வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த்
மற்றும் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், கியான் 21.15, 22-20 என்ற செட் கணக்கில் கிதம்பியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார். போட்டி 43 நிமிடங்கள் நீடித்தது. இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது. உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கிதம்பி பெற்றுள்ளார். இதேபோன்று, முதல் முறையாக சிங்கப்பூர் தங்கம் வென்றுள்ளது.