உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் வெற்றி

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் வெற்றி
Published on

வெல்வா,

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், பாப்லோ அபியனை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

36 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த், சீன வீரர் லி ஷி பெங்கை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 7-21, 18-21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவிடம் போராடி வீழ்ந்தார். நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 13-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லாங் அங்குசை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com