

பாரீஸ்,
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், துஷார் ஷெல்கி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 6-2 என்ற செட் கணக்கில் ஆந்த்ரே டெர்மினோ, யுன் சாஞ்சஸ், பாப்லோ அசா ஆகியோரை கொண்ட ஸ்பெயின் அணியை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
முன்னதாக நடந்த அரைஇறுதியில் இந்தியா 0-6 என்ற செட் கணக்கில் சீன தைபேயிடம் தோற்று இருந்தது. இதேபோல் பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவில் அங்கிதா பகத், பாஜன் கவுர், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-4 என்ற செட் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது.