

குயாங்,
சீனாவின் குயாங் நகரில் நடந்த உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் (2-ம் நிலை) 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
அவர் இறுதி ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் பர்ஜோனா போஜிலோவாவை தெறிக்க விட்டார். மீனாட்சி (51 கிலோ), பிராச்சி (57 கிலோ), தீபக் (70 கிலோ) ஆகிய மற்ற இந்தியர்கள் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.