

புதுடெல்லி,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக் காவில் வருகிற ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை நடக் கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட் டுள்ளன. கடந்த முறை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள கால்பந்து உலக கோப்பை தொடர் இந்திய ஒளிபரப்பு உரிமத்தை எந்த நிறுவனமும் இன்னும் வாங்கவில்லை.
100 மில்லியன் டாலரில் இருந்து 35 மில்லியன் டாலராக பிபா விலையை குறைத்தும், உரிமத்தை யாரும் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவிலும், அதிகாலையிலும் போட்டிகள் நடைபெறும் என்பதால் பார்வையாளர்கள் பெரிதளவில் இருக்கமாட்டார்கள் என நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.இதனால் இந்திய கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.