உலகக் கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: பிபா

அதிக அணிகள் களம் காணும் உல கக் கோப்பையாக இது அமைந்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: பிபா
Published on

நியூயார்க்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட் டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை நடை பெறும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற் கின்றன. அதிக அணிகள் களம் காணும் உல கக் கோப்பையாக இது அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'பிபா' தலைமை செயல் அதிகாரி ஹிமோ சிர்கி அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிச்சயமாக திட்டமிட்டபடி நடக்கும். உலகக் கோப்பை மிகப்பெரியது. நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாளுக்கு நாள் நிலைமை மாறிக் கொண்டு இருக்கிறது. மற்ற கால்பந்து சங்கங் கள், எங்களது சர்வதேச பார்ட்னர்களுடன் இணைந்து நெருக்கமாக பணி யாற்றுகிறோம். ஏதாவது ஒரு கட்டத்தில், எங்களுக்கு தீர்க்கமான முடிவு எடுக்க வழிகிடைக்கும்.என்றார்.இந்த நிலையில், 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ள ஈரான் இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com