உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; வெண்கல பதக்கம் வென்ற இந்தியா

சீன தைபேவின் குன்-பி யாங் மற்றும் வான்-யூ லியூ ஜோடி 36 புள்ளிகளுடன் தங்க பதக்கம் வென்றனர்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; வெண்கல பதக்கம் வென்ற இந்தியா
Published on

அல்மேதி

கஜகஸ்தான் நாட்டின் அல்மேதி நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது.

இதில் இந்தியா சார்பில் நீரு தந்தா மற்றும் விவான் கபூர் ஜோடி, கலப்பு குழு இறுதி போட்டியில் விளையாடியது. முதல் 30 இலக்குகளை குறிபார்த்து சுட்டு, 24 புள்ளிகளை அவர்கள் பெற்றனர். இத்தாலி நாட்டின் சில்வானா ஸ்டான்கோ மற்றும் மவுரோ டி பிலிப்பிஸ் ஜோடிக்கு இணையாக அவர்கள் இருந்தபோதும், இத்தாலி இணை வெள்ளி பதக்கம் வென்றது.

இதனால், இந்திய ஜோடிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. சீன தைபேவின் குன்-பி யாங் மற்றும் வான்-யூ லியூ ஜோடி 36 புள்ளிகளுடன் தங்க பதக்கம் வென்றனர். இது சீன தைபேவின் 2-வது உலக கோப்பை வெற்றியாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com