

போபால்,
போபால், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் 21 வயதான இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
403 புள்ளிகளுடன் 3-ம் இடத்தைப் பிடித்த சிப்ட் கவுர் சம்ரா, சர்வதேச ஒற்றையர் பிரிவில் வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும். இத்துடன் ஒட்டுமொத்தமாக நடப்பு தொடரில் 7 பதக்கங்களுடன் இந்தியா 2-வது இடத்திலும், 11 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.