உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
Published on

சாண்டேன்டர்,

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்பெயினின் சாண்டேன்டர் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி 21-18, 8-21, 21-16 என்ற செட் கணக்கில் ஹூ ஷி அன்னை (சீனா) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 1 மணி 31 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் சென்னையைச் சேர்ந்த சங்கர் முத்துசாமிக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் 10-வது பதக்கம் இதுவாகும்

கடைசியாக இந்திய வீரர்களில் லக்ஷயா சென் 2018-ம் ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றிருந்தார். சங்கர் முத்துசாமி அரைஇறுதியில் தாய்லாந்தின் பேனிட்சாபோன் டீராராட்சகுலுடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com