உலக பாரா தடகள போட்டிகள் நிறைவு; 22 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த இந்தியா

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
உலக பாரா தடகள போட்டிகள் நிறைவு; 22 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த இந்தியா
Published on

புதுடெல்லி,

2025-ம் ஆண்டு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மொத்தம் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடந்தன. இதில், சர்வதேச பாரா தடகள வீரர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், போட்டியை நடத்திய இந்தியா, 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் நாடுகளை தொடர்ந்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதற்கு முன் 2019-ம் ஆண்டு (துபாய்) நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 9 பதக்கங்களையும், 2023-ம் ஆண்டில் 10 பதக்கங்களையும், 2019-ம் ஆண்டில் 17 பதக்கங்களையும் இந்தியா வென்றிருந்தது.

இந்த ஆண்டு இவை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி விட்டு 22 பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடந்து முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com